அரசியல்உள்நாடு

இ.தொ.கா வின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது

“நிராகரிக்கப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபைக்கான தீர்வு இதுவரையில் எட்டப்படாத நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்பிற்கு அமைய இது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு விரைவில் இ.தொ.கா சார்பான நிலைபாட்டை அறிவிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்!”

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 20ஆம் இடம்பெற்றிருந்தது.

இதில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக நுவரெலியா மாவட்ட செயலகத்தில், நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாச்சி அதிகாரியிடம் இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்களாலும், கண்டி மாவட்டத்திற்கான வேட்புமனுக்களை குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொறுப்பான முகவர்களினாலும் சமர்பிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து ஆட்சேபனைக்காக வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் வேட்புமனுக்கள் சரிபார்க்கப்பட்டதன் பின்னர், நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை மற்றும் மஸ்கெலியா ஆகிய உள்ளூராட்சி மன்றங்களிலும், கண்டி மாவட்டத்தில் பன்வில, உடபலாத்த, பாத்தஹேவாஹெட்ட ஆகிய வேட்புமனுக்களில் இடம்பெற்றிருந்த சில முறனான தரவுகளுக்கு அமைவாக இவ்விரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் வேட்புமனுக்களையும் நிராகரிப்பதாக நுவரெலியா மற்றும் கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாச்சி அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள்.

மேலும் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை எதிர்த்து இ.தொ.கா வினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இன்றைய தினம்(10)
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் நீதிபதி முகமது லபார் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, தொடர்புடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தி இருந்தது.

ஆகவேதான் இன்றைய தினம் (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கொத்மலை, பன்வில, உடபலாத்த, பாத்தஹேவாஹெட்ட ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கனை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நுவரெலியா மற்றும் கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாச்சி அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார்கள்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட குறித்த உள்ளூராட்சி மன்றங்களில் இ.தொ.கா சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேலை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தாம் வரவேற்பதாகவும், இ.தொ.கா விற்கு கிடைத்த வெற்றியாக பார்ப்பதாக தெரிவித்ததுடன், நுவரெலியா மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபைக்கான தீர்வு இதுவரைக்கும் எட்டப்படாத நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய இது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு விரைவில் இ.தொ.கா சார்பான நிலைபாட்டை அறிவிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Related posts

மாணவன், மாணவியை கொடூரமாக தாக்கிய தேரரால் சர்ச்சை!

நாட்டில் மேலும் 293 பேருக்கு கொரோனா உறுதி

கொள்கை வகுப்பதிலிருந்து நாட்டின் தலைமைத்துவம் வரை இன மத பேதமின்றி இளைஞர்களை வலுவூட்டுவோம் – சஜித்

editor