சூடான செய்திகள் 1

ஆறுகளில் நீர்மட்டம் குறைகிறது

(UTV|COLOMBO)-நாட்டில் பெய்கின்ற கடும் மழை காரணமாக நிரம்பியிருந்த பிரதான ஆறுகளின் நீர் மட்டம் தற்போது குறைவடைந்து கொண்டிருக்கின்றது.

களனி கங்கையில் எல்லகாவ, மில்லகந்த மற்றும் புட்டுபவுல ஆகிய பிரதேசங்களில் மாத்திரம் தற்போது வௌ்ளநிலை காணப்படுவதாகவும், ஏனைய இடங்களில் நீர் வடிந்தோடிக் கொண்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

ஜின் கங்கையில் பத்தேகம பிரதேசத்தில் மாத்திரம் வௌ்ளநீர் தேங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தனகலு ஓயாவில் துனமலே பிரதேசத்தில் மாத்திரம் தற்போது வௌ்ளநீர் தேங்கி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

அதேவேளை மண்சரிவு, மண்மேடு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுவது சம்பந்தமாக விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் கஹவத்த, கலவாண, கிரிஎல்ல, கொலன்ன, நிவிடிகல, பெல்மடுல்ல, பலாங்கொட, கொடகவெல, இம்புல்பே, ஒபனாயக மற்றும் வெலிகெபொல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, கேகாலை, யட்டியந்தொட்ட மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தில் பஸ்பாகே கோரலே, கங்க இஹல கோரலே, உடபலாத்த, தொலுவ மற்றும் தெல்தொட்ட பிரதேசங்களுக்கும் இந்த எச்சரிக்கை நீடிப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம்!

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 960 ஆக அதிகரிப்பு

நாடு திரும்பினார் ஜனாதிபதி