உள்நாடு

ஆறுகளில் நீர்மட்டம் அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) –

களு, கிங், நில்வலா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம்  தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த கங்கைகளின் தாழ்வான பகுதிகளில் நீர் மட்டம் இன்னும் அதிகமாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் எந்தப் பிரதேசத்திலும் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகவில்லை. எனினும் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கிங் மற்றும் நில்வலா கங்கையின் தாழ்வான பகுதிகளிலும், களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் கீழ்ப்பகுதிகளிலும், புலத்சிங்கள பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆறுகளின் கீழ்ப்பகுதிகளிலும் நீர் மட்டம் இன்னும் அதிகமாகவே உள்ளது. எனினும், அப்பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை என நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர் எஸ். பி. சி. திரு.சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.

இந்த ஆறுகளின் நீர்மட்டம் உயர்வதால் எதிர்வரும் காலங்களில் அதிக மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் திரு.சுகீஸ்வர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக தென்மேற்கு பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி இல்லாத காரணத்தினால் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பெல்ஜியத்தில் இருந்த 43 பேர் நாடு திரும்பினர்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்சினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இன மத பேதங்களுக்கு அப்பால்   மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் – ரிஸ்லி முஸ்தபா

editor