சூடான செய்திகள் 1

ஆறு லட்சம் குடும்பங்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் சமுர்த்தி வழங்கும் நிகழ்வு

(UTV|COLOMBO) இம்மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 15ஆம் திகதி வரை ஆறு லட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமூர்த்தி வழங்கும் நிகழ்வு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் இடம்பெறும்.

அமைச்சர் தயாகமகேயும் இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளவுள்ளார். இதன் ஆரம்ப நிகழ்வு பிரதமர் தலைமையில் இம்மாதம் 30ஆம் திகதி அம்பாறையில் இடம்பெறவுள்ளது. 31ஆம் திகதி காலை பத்து மணிக்கு பொலன்னறுவையில் நடைபெறும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும்.

அத்துடன் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரம் கெக்கிராவ பிரதேச மக்களுக்கு சமுர்த்தி வழங்கப்படவுள்ளது. இம்முறை வரவுசெலவுத் திட்ட யோசனைக்கு அமைய முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் புதிதாக ஆறு லட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தியை வழங்குவதற்காக அரசாங்கம் ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது.

Related posts

பஸ் கட்டணத்தை குறைக்காத பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு கணினி அவசர சேவை சபையின் அவசர செய்தி…!!

ஜனாதிபதி தலைமையில் மங்களவின் 30 வருட அரசியல் வாழ்க்கை பூர்த்தி வைபவம்