புத்தாண்டை முன்னிட்ட கடந்த 6 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 787,000 வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 273 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேற்று (15) மாத்திரம் 48 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்களின் நலன்கருதி இன்று (16) அதிவேக நெடுஞ்சாலையின் அனைத்து கட்டணம் செலுத்தும் கூடாரங்களும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் ஏதேனும் அனர்த்தங்களை எதிர்கொண்டால், 1969 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.