உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் – சிலாபம் வீதியில் வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) – மதுரங்குளிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் – சிலாபம் வீதி தடைப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் வீதியை மறித்து கொண்ட கும்பல் ஒன்று இவ்வாறு செயற்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்காரணமாக புத்தளம் – சிலாபம் வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலைமையைக் கட்டுப்படுத்த மதுரங்குளிய பொலிஸார் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

சுற்றுலா துறையில் ஏற்படப்போகும் புதிய மற்றம்!

ஷானி அபேசேகரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை