விளையாட்டு

ஆர்ஜன்டீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த குரோஷியா

(UTV|RUSSIA)-குரோஷியாவிடம் 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்த லியோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜன்டீன அணி இம்முறை உலகக் கிண்ண தொடரின் ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.

மறுபுறம் குரோசிய அணி தனது முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கிண்ண 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

அதேவேளைப் பெரு அணிக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் வெற்றியீட்டியது. இந்தப் போட்டி ஒன்றுக்குப் பூச்சியம் என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது. இதன்மூலம் பெரு அணிக்குச் சுற்றுத்தொடரில் இருந்து வெளியேற நேர்ந்துள்ளது.

அத்துடன் டென்மார்க், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இரு அணிகளும் ஒவ்வொரு கோல்களைப் போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இன்று முதல் மூன்று வருடங்களுக்கு புதிய பணிப்பாளராக டொம்

இங்கிலாந்து 6 -1 கோல் கணக்கில் வெற்றி

டெஸ்ட் தரவரிசையில் முதல் இருபதுக்குள் இருவர்