உள்நாடு

ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடை

(UTV | கொழும்பு) – பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானியை வலுவற்றதாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடை விதிக்குமாறு கோரப்பட்ட போதும் நீதிமன்றம் அதனை நிராகரித்தது.

இந்த மனுமீதான மேலதிக விசாரணைகளுக்கு எதிர்வரும் மே மாதம் 5ஆம் மற்றும் 17ஆம் திகதிகளை குறித்தொதுக்கி வழக்கினை நீதிமன்றம் பிற்போட்டது.

Related posts

54 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் செப்டெம்பர் 11 இல் ஆரம்பம்!

பதவி விலகல் கடிதத்தை கையளித்தார் கப்ரால்

கொரொனோ வைரசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் எம்மை தைரியப்படுத்துங்கள் – GMOA