உள்நாடு

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 43 சந்தேக நபர்கள் கைது

(UTV|கொழும்பு) – கடந்த 36 மணிநேரத்தில் வடக்கு கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 590 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புங்குடுதீவு கடற் பகுதியில் சுமார் 300 கிலோகிராம் கேரள கஞ்சாவும், மாதகல் கடற் பகுதியில் 191 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், மைலிட்டி கடற் பகுதியில் 99 கிலோகிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 43 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

நாடு பூராகவும் மழையுடனான வானிலை

முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்ப தயார்

MV Xpress pearl கப்பலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு