வணிகம்

ஆடை ஏற்றுமதி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரிக்கும்

(UDHAYAM, COLOMBO) – ஐரோப்பிய சங்கத்தினால் இலங்கைக்கு ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டு ஒரு வருடத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதியின் மூலமான வருவாய் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆடை ஏற்றுமதியாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகை நீக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் ஆடை ஏற்றுமதித் துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆடை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் பீலிக்ஸ் பெர்னான்டோ குறிப்பிட்டார்.

இலங்கைக்கு ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும் பட்சத்தில் இலங்கையில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 13 சதவீத விலைக் கழிவொன்று ஏற்படும்.

இதன் மூலம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கு கேள்வி அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு ஜி எஸ் பி பிளஸ் வரிச் சலுகை கிடைத்தாலும், ஏற்றுமதி ஆடைகளின் விலைகளை அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படாது என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலத்தில் இலங்கையின் வரிச்சலுகை நீக்கப்பட்டபோது இலங்கையிடம் இருந்து ஆடைகளை கொள்வனவு செய்த நாடுகள் வியட்னாம் பங்களாதேஷ் போன்ற நாடுகளிடமிருந்து ஆடைகளை கொள்வனவு செய்ய ஆரம்பித்தன.

இந்த நிலையில் இலங்கை இழந்த குறித்த சந்தையை மீள பெற்றுக்கொள்வதற்கு ஆடை உற்பத்திகளின் விலைகளை குறைந்த மட்டத்தில் பேணுவது அவசியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புறக்கோட்டையில் சில உணவு பொருட்களின் விலைகள் குறைவு

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை

படைப்புழு தாக்கம்-நட்டயீடு எதிர்வரும் 10 ஆம் திகதி