உள்நாடு

ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் நாளை முதல் சட்டப்படி வேலையில்

(UTV|கொழும்பு)- அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கத்தினரின் நாளை(27) முதல் சட்டப்படி வேலையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் 5 நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடளாவிய ரீதியில் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் சுகயீன விடுமுறையின் கீழ் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் இசுறுபாயவிற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தற்போதைய அரசில் அரசியல் பழிவாங்கல்கள் இருக்காது

சொய்சபுர துப்பாக்கிப் பிரயோக சம்பவம்; சந்தேக நபர் கைது

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்

editor