கேளிக்கை

ஆசியாவின் முதல் பகிர் திரை திரைப்படம் ‘பிகினிங்’

(UTV | சென்னை) – நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களில் வில்லன், குணச்சித்ரம் வேடங்களில் நடித்தவர் வினோத் கிஷன். இதேப்போன்று 96 படத்தில் சின்ன திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷன்.

இவர்கள் இருவரும் இப்போது இணைந்து நடிக்கும் படம் ‘பிகினிங்’ .

இது பகிர் திரை (Split Screen) திரைப்படமாக உருவாகி வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு காட்சிகள் ஒளிபரப்பாகும் ஏசியாவின் முதல் பகிர் திரை படமிது .

மேலும் இந்த படத்தில் ரோகினி, சச்சின் மணி ஆகியோர் நடிக்கின்றனர். இயக்குனர் ஜெகன் விஜயா இந்த படத்தை இயக்குகிறார். தற்போது ‘பிகினிங்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Related posts

ஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர்

நயனின் மூக்குத்தி அம்மன்

பிரபல மொடல் அழகி கொலை…