விளையாட்டு

ஆசிய றக்பி சம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் சீனாவில்

(UTV|COLOMNBO)-19 வயதுக்கு உட்பட்ட ஆசிய றக்பி சம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் சீனாவின் தாய்-பே நகரில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் இலங்கையின் சார்பில் கலந்து கொள்வதற்கான 38 பேரடங்கிய வீரர்களில் இருந்து இந்தக் குழு தெரிவு செய்யப்பட உள்ளது. கொழும்பு குழுவிலும் மற்றும் கண்டி குழுவிலும் இருந்து இரண்டு கட்டங்களில் இந்தப் போட்டிக் குழுவினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை றக்பி விளையாட்டு குழுக்களிடம் இருந்து 25 சிறப்பு வீரர்களைக் கொண்ட இந்த இறுதிக் குழுவினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதி வரை இந்தப் போட்டிகள் இடம்பெறும்.

போட்டிகளில் இலங்கையுடன் ஹொங்கொங், தென்கொரியா மற்றும் சீன-தாய்பே குழுக்கள் போட்டியிடுகின்றன.

 

 

 

Related posts

இலங்கை அணியின் புதிய தலைவர் தெரிவு

இலங்கை அணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து

FIFA அரையிறுதி இன்று ஆரம்பம்