சூடான செய்திகள் 1விளையாட்டு

ஆசிய பளு தூக்கும்போட்டியில் பதக்கங்களை வென்ற போட்டியாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஆசிய பளு தூக்கும்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்துகொண்ட குழுவினர் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

போட்டித் தொடரில் ஆறு தங்க பதக்கங்கள், 16 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 18 வெண்கல பதக்கங்களை வென்ற இலங்கை அணியினரின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி போட்டியாளர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தேசிய பயிற்சியாளர் மோதிலால் ஜயதிலக்க, கொழும்பு பளு தூக்கும் சங்கத்தின் பணிப்பாளர் சுபாஷினி வீரசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

 

Related posts

கொரோனா; நோயாளிகள் 592, குணமடைந்தோர் 134

நாட்டின் பல பகுதிகளுக்கு மழையுடனான வானிலை

அனைத்து மாவட்டங்களதும் இறுதி முடிவுகள்