விளையாட்டு

ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் தர்ஜினி

(UTV | கொழும்பு) – சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியில் நட்சத்திர வீராங்கனையும் ஆசியாவின் அதி உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவில் வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றிவரும் தர்ஜினி சிவலிங்கம் அங்கிருந்து நேரடியாக சிங்கப்பூர் சென்று இலங்கை குழாத்துடன் இணையவுள்ளார்.

ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஐந்து தடவைகள் சம்பியனான இலங்கை, கடைசியாக 2018 இல் வென்ற கிண்ணத்தை தக்கவைத்துக்கொள்ளும் என நம்பப்படுகிறது.

இலங்கை வலைபந்தாட்ட அணியின் தலைவியாக மத்திய நிலை வீராங்கனை கயஞ்சலி அமரவன்ஷ நியமிக்கப்பட்டுள்ளதுடன் உதவித் தலைவியாக பக்கநிலை எதிர்த்தாடும் வீராங்கனை துலங்கி வன்னித்திலக்க செயற்படவுள்ளார்.

Related posts

இலங்கை வீரர்களுக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள தடை

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணிக்கு புதிய தலைமை

அமைச்சர் பைசர் ஐசிசி முன்னிலையில்