விளையாட்டு

ஆசிய கால்பந்து போட்டியை நழுவ விட்டது இலங்கை

(UTV | கொழும்பு) –   17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் பிரிவு போட்டிகளுக்காக இலங்கை அணி நேற்று உஸ்பெகிஸ்தானுக்கு செல்லவிருந்தது.

இலங்கை 17 வயதுக்குட்பட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 23 வீரர்களும், 05 அதிகாரிகளும் இந்த போட்டிக்காக புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில், உரிய விமான டிக்கெட்டுகள் ஒதுக்கப்படாததால், போட்டியை இழந்துள்ளனர்.

கால்பந்து சம்மேளனத்தின் தற்போதைய நெருக்கடி காரணமாக இளம் வீரர்கள் இந்த மதிப்புமிக்க அனுபவத்தை இழந்துள்ளனர்.

இங்கு இன்னொரு விடயம் என்னவென்றால், போட்டித் தொடரில் வீரர்கள் தோல்வியடையும் போது இலங்கை 70 இலட்சம் ரூபா அபராதம் செலுத்த வேண்டும்.

இதேவேளை, தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தலை நடத்தும் வகையில் திருத்தம் செய்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நேற்று(04) மேன்முறையீட்டு நீதிமன்றில் இணக்கம் தெரிவித்துள்ளது.

சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ பதவிக்காலத்தை நீடிப்பதற்கான தீர்மானத்தை ரத்து செய்து விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி சம்மேளனத்தின் தலைவரும் செயலாளரும் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

93 ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி

ஒரு நிமிடத்திற்கு 20 லட்சம் ரூபாய் சம்பளம்-மெஸ்சி

தொடர் நிறைவடையும்வரை அவகாசம் வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் சபை கோரிக்கை