உள்நாடுசூடான செய்திகள் 1

ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிப்பதற்கு இன்று முதல் அனுமதி

(UTV|கொழும்பு) – கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில், அரச – தனியார் பேருந்துகளிலும் மற்றும் ரயில்களிலும் இன்று(13) முதல் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகள் பயணிக்க அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று(13) முதல் இதற்கான அனுமதி வழங்கப்படுவதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது, அரச மற்றும் தனியார் துறைகளில் கடமைக்கு செல்லும் ஊழியர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அவசியமற்ற வகையில் பயணங்களை மேற்கொள்ள பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என போக்குவரத்துதுறை அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

கொழும்பு உள்ளிட்ட சில நகரங்களில் வளி மாசடைதல் அதிகரிப்பு!

இந்தியா சென்றார் ஜனாதிபதி : ஜனாதிபதி செயலாளாரக சந்தானி -அமைச்சர்கள் நியமனம்

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தயார் – ராஜித்த சேனாரத்ன

editor