உலகம்

ஆங் சான் சூகி : விடுதலையினை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்

(UTV |  மியன்மார்) – மியன்மாரில் தன்னிச்சையாக தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையினை வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை உடன் விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டும் பொருட்டு இன்றும் நாடாளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆங் சான் சூகி உள்ளிட்ட 350க்கும் மேற்பட்டவர்கள் கடந்த முதலாம் திகதி தொடக்கம் தடுத்துவைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடும் பனிப்பொழிவு -14 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷின் தலைநகரான டாக்கா முடங்கியது

ஜப்பான் பிரதமர் பதவி விலகத் தயார்