உள்நாடு

அஸ்வெசும நலன்புரி திட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசம் வழங்க தீர்மானம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் நாளை மறுதினம் (25) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அஸ்வெசும நலன்புரி திட்டப் பயனாளர்களுக்கான குறைகளைச் சமர்ப்பிப்பதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை மறுதினம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை குறைபாடுகளைத் தெரிவிக்க முடியும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

புத்தாண்டில் நடந்த சோக சம்பவம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்குவைக்கிறது – மொட்டு கட்சி.

சஜித் – அநுரவின் கல்வித் தகைமையை வெளிப்படுத்துமாறு கோரிக்கை!