கேளிக்கை

அவருடன் நட்புதான்,காதல் இல்லை…

(UTV|INDIA) ஒரு அடார் லவ் மலையாள படத்தில் கண்ணடித்து பிரபலமான நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு ஜோடியாக ரோ‌ஷன் நடித்திருந்தார்.
பிரியா வாரியர் தற்போது இந்தியில் நடித்து வருகிறார். ஆனாலும் தன்னுடன் முதல்படத்தில் இணைந்து நடித்த ரோ‌ஷனுடன் டேட்டிங் செய்வதாகவும் இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி பிரியாவிடம் கேட்ட போது, ‘சினிமாவில் வதந்திகள் தொழிலின் ஒரு அங்கமாகி விட்டது. அது நீண்ட நாள் தொல்லை தராது. தற்போது நடிப்பில் தான் கவனம் செலுத்துகிறேன். எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. என்னையும் ரோ‌ஷனையும் ஜோடியாக வைத்து படங்கள் எடுக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. அவ்வளவு தான்’ என்றார்.

Related posts

நிர்வாண புகைப்படம் வெளியிட்ட ரன்வீர் சிங் மீது பொலிசில் முறைப்பாடு

பரீட்சை எழுத சென்ற சாய் பல்லவிக்கு நடந்த வேலை

விமான பைலட் ஆகும் நடிகை ஸ்ரீதேவி மகள்