கேளிக்கை

அவசரமாக திருமணம் நடைபெற்றது ஏன்? – யோகி பாபு

(UTV|இந்தியா) – நடிகர் யோகிபாபு தனது குலதெய்வம் கோயிலில் மஞ்சுபார்கவி என்ற பெண்ணை இரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், இது குறித்து யோகிபாபு விளக்கமளித்துள்ளார். எதிர்பாராத குடும்ப சூழல் காரணமாக அவசர நிலையில் திருமணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அதனால் யாருக்கும் முறைப்படி திருமண அழைப்பு கொடுக்க முடியவில்லை என்றும் அதனால் தனக்கு மிகுந்த வருத்தம் என்றும் தெரிவித்துள்ளார்

தன்னுடைய குடும்ப சூழ்நிலையை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று தான் நம்புவதாகவும் அனைவரின் வாழ்த்துக்களை பெற முடியவில்லை என்ற வருத்தம் தனக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் திருமணத்திற்கு யாரையும் அழைக்க முடியாவிட்டாலும் சென்னையில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் முறைப்படி அழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கைதாவாரா செளந்தர்யா ரஜினிகாந்த்?

இரண்டாவது வாரத்தில் ‘தி லெஜண்ட்’ திரைப்படம்

விஜய்சேதுபதிக்கு அவர் ஸ்டைலில் நன்றி தெரிவித்த ஹர்பஜன் சிங் !