சூடான செய்திகள் 1

அவசர விபத்துக்களுக்கு உள்ளான 400 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்

(UTV|COLOMBO) அவசர விபத்துக்களுக்கு உள்ளான 413 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்துடன், ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையானது 8 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வீதி விபத்துக்களினால் காயமடைந்த 113 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளில் இடம்பெற்ற விபத்துக்களினால் 49 பேர், துன்புறுத்தல்கள் தொடர்பில் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தீ அனர்த்தம் காரணமாக ஆறு பேர் காயமடைந்த நிலையில், தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

விஸாவை ரத்துச் செய்யுமாறு பிரித்தானிய அரசிடம் கோரிக்கை

‘குஷ்’ என்ற போதைப் பொருளுடன் பெண்ணொருவர் கைது

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது