ஒரு தேடல்கிசு கிசு

அழையாத விருந்தாளிக்கு இரையாகவுள்ள இலங்கை

(UTV | கொழும்பு) – “கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா உலகின் முதலிடத்தினை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதை கண்முன்னே காணக்கூடியதாக இருக்கின்றது. இது பெரும் கவலைக்கிடமான நிலைமையாகும்”.

தென் இந்தியாவின் வைத்திய கல்லூரியில் சேவை செய்யும் ஒரு ஆய்வாளரான வைத்தியர் ஆனந்த் பா(B)ன்யவின் ஆதங்கமாகும்.

அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“எதிர்வரும் காலங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கின்றமையினை கட்டுப்படுத்த முடியாதுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ளும் காலம் கடந்து விட்டது. கொரோனா நோயாளிகளை கொண்ட உலக நாடுகளின் பட்டியலில் நேற்றைய தினத்தில் இந்தியா இரண்டாம் இடத்தினை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நேற்று வரையில் இரண்டாம் இடத்தில் பிரேசில் நாடு தான் இருந்தது. அதவாது பிரேசிலையும் மீறி இந்தியா இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது. இது ஒரு பேரழிவு என்றே கூற வேண்டும்.

இந்தியாவில் ஒரு நாளில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே உள்ளது. உலகின் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறு அதிகூடிய தொற்றாளர்கள் ஒரு நாளில் பதிவாகியதில்லை. கடந்த ஞாயிறன்று(06) மட்டும் இந்தியாவில் 90,800 கொரோனா நோயாளிகள் பதிவாகியிருந்தன.

இது எதிர்வரும் நாட்களில் கூடினாலும் ஆச்சரியமடைய காரணங்கள் இல்லை. இன்று வரையில் கொரோனா தொற்றாளர்கள் 42 இலட்சத்தினை கடந்துள்ளது. இதுவரையில் கொவிட் – 19 உயிரிழப்புகள் 72,816ஆக பதிவாகியுள்ளது. கொவிட்-19 பரவலின் நிலையமாக இந்தியா இருந்து வரும் நிலையில், பரவலை கட்டுப்படுத்த முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது..” எனவும் வைத்திய ஆய்வாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பெரும்பாளோரின் கேள்வி இந்தியாவின் நிலைமை இந்தளவு மோசமாக இருக்கக் காரணம் என்ன என்பது தான் புரியாத கேள்விக் குறியாகும். இந்தியா என்பது கூடிய சனத்தொகையினை கொண்டுள்ள ஒரு நாடு, அதாவது சுமார் 1.4 பில்லியன் மக்கள் வசிக்கும் நாடு என்பதை நாம் நினைவு கூறத்தான் வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் முதல் சில மாதங்கள் நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் குறைந்து வர முடக்கப்பட்ட நாடுகள் அதிலிருந்தும் விலகியமையும் முறையான சுகாதார ஒழுங்கு முறைகளை கடைபிடிக்காமையுமே இதற்கு காரணம் என சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மாதக் கணக்கில் வீடுகளில் முடங்கியிருந்த மக்கள் நாடு திறக்கப்பட்டதும் மீண்டும் தங்கள் வழமை நிலைமைக்கு ஆளாக்கப்பட்டு அன்றாடத் தேவைகள் மற்றும் பயணங்களை முன்னெடுக்க ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு சென்ற பலர் வைரஸ் இணையும் அவர்களுடன் சேர்த்து கூட்டி வந்தனர் என்றே கூற வேண்டும். இவ்வாறு தான் கிராமங்கள், நகரங்கள் மற்றும் பிரதேசங்கள் என பரவக் காரணமாக இருந்தது.

இவ்வாறு தொடர்ச்சியாக பல்வேறு சுகாதார நடைமுறைகளுக்கு கீழ் வாழ மக்கள் பெரிதும் அங்கலாய்த்துக் கொண்டனர். இதற்கு பிரதான காரணமாக பொருளாதாரத்தினை கூறலாம். பொருளாதாரம் பெரும் தலையிடியாக மாறியது எனலாம். அதுவே அவர்களது சுகாதார நடைமுறைகளை சரிவர பின்பற்றாமைக்கான முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர், ‘பசியினால் இறப்பதை விட கொவிட்-19 இனால் சாவது மேல்’ என்ற தொனியின் கீழ் அநேகமானோர் அலட்சியமாக இருந்தனர் எனலாம்.

இந்தியாவில் தொற்றாளர்கள் இவ்வாறு ஒரு நாளில் அதிகரிக்க காரணம், தொற்றாளர்கள் இனங்காண முன்னெடுக்கப்படும் பரிசோதனைகள் எண்ணிக்கையானது அதிகளவு அதிகரிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது ஒரு நாளில் மாத்திரம் மில்லியனுக்கு அதிகமான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்கும் நிலையில், மேலும் தொற்றளர்கள் அதிகரிக்கவும் பலி எண்ணிக்கை அதிகரிக்கவும் அநேகமாக நிகழ்தகவு கூடிய விதத்திலேயே இருக்கின்றது என்பது ஆய்வாளர்களின் எதிர்வு கூறலாகும்.

அவ்வாறு இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இலங்கையின் நிலை இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கின்றது எனலாம். எவரும் எதனையும் எதிர்பார்த்திருப்பது இல்லை. என்றாலும் தொற்று என்பது தொற்றாகும். அதனை கட்டுப்படுத்த நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இலங்கையினை பொருத்தமட்டில் கொவிட்-19 தொற்று முற்றாக ஒழிந்து விட்டது. வெளிநாடுகளில் இருந்து வருகை தருவோருக்கே தொற்று என்றும் ஏனையோர் அலட்சியம் செய்வதும், இந்தியாவின் ‘பசியினால் இறப்பதை விட கொவிட்-19 இனால் சாவது மேல்’ என்ற தொனியின் அழிவாகவே இருக்கும் என்பதும் எச்சரிக்கையாகும்.

இலங்கையில் இப்பதிவினை இடும் வரையில் (பிற்பகல் 01:45) கொரோனா தொற்றினால் 3,123 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும், இதில் 2,935 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

  • ஆர்.ரிஷ்மா

Related posts

சிறுபான்மை கட்சிகளுக்கு எந்தவொரு அமைச்சரவை அமைச்சு பதவிகளும் இங்கு இல்லை

சர்வதேசத்தின் ஆதரவு ரணிலுக்கே?

கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள ப்ரேன்டிக்ஸ் இனால் ரூ.6250 மில்லியன் நிதி