சூடான செய்திகள் 1

அலோசியஸ் மற்றும் கசுன் – நவம்பர் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இருவரையும் நவம்பர் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகிய இருவரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளுபிட்டிய, மல்பாரவில் அமைந்துள்ள வீட்டில் வைத்தே அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை

முஸ்லிம் மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது – கோட்டாபய