சூடான செய்திகள் 1

அலுகோசு பதவிக்கான விண்ணப்ப கோரல்…

(UTV|COLOMBO) மரண தண்டனையினை மீண்டும் அமுல்படுத்தவுள்ள நிலையில், அலுகோசு பதவிக்கு எதிர்வரும் திங்கட் கிழமை(11) முதல், விண்ணப்பம் கோரப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, போதைப் பொருள் வர்த்தர்களுக்கு அந்த தண்டனையை செயற்படுத்துவதற்காக, ஜனாதிபதியினால் எடுக்கப்படும் தீர்மானங்களை இலகுபடுத்துவதற்காகவே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த பதவிக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என்றும் 45 விண்ணப்பங்கள் கோரப்படுவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தூக்குமரத்தை செயற்படுத்துவதற்கு பதிலாக வேறு உபகரணங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

கங்காராம விகாரை ஆசீர்வாத பூஜையில் ஜனாதிபதி பங்கேற்ப்பு

டிக்கிரி யானை உயிரிழந்தது