சூடான செய்திகள் 1

அலி ரொஷான் உள்ளிட்ட 07 நபர்களுக்கும் விடுதலை

(UTV|COLOMBO) சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேரையும் விடுவிக்க கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீமன்றத்திற்கு அதிகாரமில்லை என்ற காரணத்தால் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

Related posts

மத்தள விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் அசோக் அபேசிங்க

மாபெரும் கூட்டணியுடன் பிரதமர்?

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு