சூடான செய்திகள் 1

அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு

(UTV|COLOMBO)-அண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஜனவரி 04ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்போது கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர், சம்பவம் தொடர்பில் சுமார் இருபது பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், முறைப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்தியதாக எந்தவொரு தகவலும் பதிவாகவில்லை என்றும் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதனையடுத்து வழக்கை எதிர்வரும் ஜனவரி 04ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அன்றைய தினம் விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை மன்றில் சமர்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

கொழும்பு லோட்டஸ் வீதிக்கு பூட்டு-கண்ணீர்ப் புகை பிரயோகம்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் 5 பேர் பூரண குணம்

வெசாக் பண்டிகையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை