சூடான செய்திகள் 1

அர்ஜுன் அலோசியஸ் வைத்தியசாலையில் அனுமதி

(UTV|COLOMBO)-மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கைதாகி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெர்பச்சுவல் ட்சரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோஷியஸ் திடீர் நோய்வாய்ப்பட்டதால் சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்று(19) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அர்ஜுன் அலோஷியஸுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இன்றைய(20) வழக்கு விசாரணைகளுக்காக அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும், இதன் பின்னர் அவரை பொரல்லையில் உள்ள வைத்திய பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

Related posts

யாசகம் பெறுவோரைக் கைது செய்யும் நடைமுறை இன்று முதல்

நாட்டின் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

மூன்றாம் இடத்தை பிடித்த இலங்கை!!!