உள்நாடு

அரசை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தில் மகா சங்கத்தினருடன் கைகோருங்கள்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு முன்னின்று செயற்பட்ட வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க மக்களுடன் மகா சங்கத்தினருடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அரசாங்கம் எடுக்கும் தவறான முடிவுகளினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அந்த தவறுகளை திருத்திக் கொள்வதில் அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு அக்கறை இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் மக்களை ஒடுக்காமல் நாட்டை ஆட்சி செய்யும் நடவடிக்கையில் இருந்து சிறிது காலம் விலகிக் கொள்ளுமாறும் வண.முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று சில அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள போராட்டங்கள் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தினார்.

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களும் மீண்டும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வெளியேற்ற அல்லது சரியான பாதையில் செல்ல ஒத்துழைக்க வேண்டுமெனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதமளவில்

‘Beaver Blood Moon’ – இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று

பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசை கையளிக்க தயார் – ஜனாதிபதி