உள்நாடு

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் தற்போதைய நிலைப்பாடு

(UTV | கொழும்பு) – அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவை கோருவதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, பிரேரணையை முன்னெடுப்பதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்தநாயக்க தெரிவித்தார்.

தற்போதைய நிலைமை குறித்து பொருளாதார நிபுணர்கள் நாடாளுமன்றக் குழுவிற்கு விளக்கமளித்தனர்.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளுடன் எதிர்க்கட்சிகள் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Related posts

இன்று நண்பகல் 12.00 மணி ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

editor

உலக சந்தையில் மசகு எண்ணையில் வீழ்ச்சி

பிரதமர் ஹரினி தலைமையில் கூடிய மத்திய கலாசார நிதியத்தின் ஆளுனர் சபை

editor