உள்நாடு

அரசு வைத்தியசாலைகளில் போதுமான மருந்து கையிருப்பில்..

(UTV | கொழும்பு) – அரசு வைத்தியசாலைகளில் அடுத்த மூன்று மாதங்களுக்கு போதுமான மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக அரச மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தனியார் துறைக்கு மருந்துகளை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக அதன் செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பரசிட்டமோல் உற்பத்தியை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல தொற்றுநோய்கள் காரணமாக பரசிட்டமோல் தேவை அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

STF சிரேஷ்ட பெண் அதிகாரி ஒருவர் ஆண் மாறுவேடத்தில்

நீர் கட்டணம் செலுத்தாதோர் விசேட அறிவித்தல்

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் உயர்வு!