வணிகம்

அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் பார்க்க சீனியின் விலையில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிலோ சீனியின் 150 ரூபாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனி விலையை 100 ரூபாவாக நிர்ணயிக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும் சீனியின் விலை திடீரென 150 ரூபாயாக அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

சீனி விலை அதிகரித்தமை தொடர்பில் உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு எவ்வித காரணத்தையும் இதுவரையில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

காய்கறிகளின் விலைகளில் அதிகரிப்பு

பெரிய வெங்காய விளைச்சல் அதிகரிப்பு

Oracle Cloud தொழில்நுட்பத்துடன் வேகமான புதிய தயாரிப்புக்களை அறிமுகம் செய்ய HNB Assurance ஆயத்தமாகிறது