வகைப்படுத்தப்படாத

அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கை

(UDHAYAM, COLOMBO) – அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கை எதிர்வரும் ஓரிரு வாரங்களில் நிறைவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

அரசியல் யாப்பு தயாரிப்பு தொடர்பான முக்கியமான விடயங்களில், பல்வேறு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் மூன்று முறை கூடிய யாப்பு வழிநடத்தல் குழு, இடைக்கால அறிக்கையின் வரைவு தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

இதன்படி தற்போது இடைக்கால அறிக்கைதயாரிப்பு மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும், இந்த மாத இறுதியில் அதனை நிறைவு செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related posts

தேர்தல் விதி மீறிய 07 பேர் கைது

குடியிருப்பு பகுதிகளில் படையெடுக்கும் பனிக்கரடிகள்

பாரிய யுத்தக் கப்பலொன்றை வாங்க தயாராகும் கடற்படை!