சூடான செய்திகள் 1

அரசியல் கட்சிகளை விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் – தேர்தல்கள் ஆணைக்குழு

(UTVNEWS | COLOMBO) – அரசியல் கட்சிகளை விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் உரிமையாளர்கள் ​தேர்தல் காலங்களில் தமது கட்சிகளை அதிகூடிய தொகைக்கு விற்பனை செய்கின்றமை குறித்து கடந்த வருடங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த இந்நடவடிக்கை ஜனநாயக அரசியலுக்கு பாரிய அச்சுறுத்தல் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதோடு, இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து, அரசியல் கட்சிகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் துரிதமாக சட்டம் ஒன்றை உருவாக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Related posts

சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை, அப்பட்டமான பொய் என ரிஷாட் தெரிவிப்பு!

ஐ.தே.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து கபீர் ஹாசிம் இராஜினாமா

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் முற்றுப் பெறுகிறது…