சூடான செய்திகள் 1

அரசியல் கட்சி உறுப்பினர்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையே சந்திப்பு

(UTV|COLOMBO) – அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் நாளை(22) காலை 10.00 மணியளவில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெறவுள்ள மூன்றாவது சந்திப்பு இதுவாகும்.

இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களுக்கும் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சஜித் ஜனாதிபதி வேட்பாளர்?; ரணில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை

எதிர்வரும் மே மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதி

இலங்கையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் விமானங்கள் இரத்து