உள்நாடு

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவைக்கு

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலம் இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான சட்டமூலத்தை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் அதிகாரங்களைக் குறைக்கும் திருத்தங்களும், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் அமர்வதைத் தடுக்கும் வகையிலான திருத்தங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Related posts

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி

மேலும் 4 பேர் பூரண குணமடைந்தனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழப்பு (UPDATE)