உள்நாடு

அரசின் சட்டமூலத்தை தோற்டிக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்னிற்கும்

(UTV | கொழும்பு) – ஜோன் கொத்தலாவ பாதுகாப்புப் பல்கலைக்கழத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல இடமளிக்க வேண்டுமென தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ, அரசாங்கம் கொண்டுவந்துள்ள சட்டமூலத்தை தோற்டிக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்னிற்கும் எனவும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் இதுவரையில் நடத்தி செல்லப்பட்ட வகையில் தொடர்ந்து அதனை நடத்திச் செல்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றார்.

அரசாங்கம் கொண்டுவந்துள்ள, ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலமானது, இலவச கல்வி மீது அரசாங்கம் முன்னெடுக்கும் பாரதூரமான தாக்குதல் எனவும், இந்தத் தாக்குதலை ஐக்கிய மக்கள் சக்தி தோற்கடிக்கும் எனவும் தெரிவித்தார்.

வாய் பேச்சில் மாத்திரமல்லாது, நடைமுறையிலும் இச்சட்டமூலத்தை தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்னிற்கும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Related posts

ஆன்லைன் முறையில் நிறுவன பதிவாளர் செயல்பாடுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் அவதானம்

editor

சகலரும் இணங்கக்கூடிய கல்விக் கொள்கையைத் தயாரிப்பது முக்கியமானது