அரசியல்உள்நாடு

அரசாங்கம் பாட்டனாரிடம் ஆலோசனை பெறவேண்டும் – ரணில்

அரசநிதியை கையாள்வது எப்படி என தெரியாவிட்டால் அரசாங்கம் ‘பாட்டனாரிடம் ” ஆலோசனை பெறவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு நிதியை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும், அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை இரண்டு கட்டமாக அதிகரிக்கவேண்டும் என்ற உதய செனிவிரட்ணகுழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு இது தெரிந்திருக்கவேண்டும் தெரியாவிட்டதால் பாட்டனாரிடம் கேளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் மூன்றாவது தொகுதி கடன் இந்த வருட இறுதியில் கிடைக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் மாத்திரமே இது சாத்தியம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கை மக்களுக்காக நான் கடவுளுடன் பேசுகின்றேன் – பாதுக்கே அஜித்தவன்ச தேர்ர்

யாழில் வயலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

editor

5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!