உள்நாடு

அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்ய தயாரில்லை – சஜித்

(UTV | கொழும்பு) -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவொரு உடன்படிக்கையும் செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (04) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை நொடிப்பொழுதினில் தூக்கி எறிவதே இப்போது நாம் செய்ய வேண்டிய ஒன்று என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

Related posts

டயனா கமகேவின் பிடியாணை மீளப் பெறப்பட்டது

editor

30 ஆம் திகதி விசேட விடுமுறை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்!

பொதுத் தேர்தல் – 26 ஆம் திகதி விசேட கலந்துரையாடல்