வகைப்படுத்தப்படாத

அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா? விலகிச் செல்வதா?: மத்திய செயற்குழுவே தீர்மானிக்கும் – லக்ஸ்மன்

(UDHAYAM, COLOMBO) – அடுத்த அமைச்சரவை சீர்திருத்தின் பின்னர் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருப்பதா? என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குருநாகல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தலைவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரியும் மஹிந்தவும் ஒன்றாக இணைந்து கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டுச் செல்லுங்கள்.

2020ஆம் ஆண்டு சுதந்திர கட்சியே ஆட்சியமைக்க வேண்டும் எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா? விலகிச் செல்வதா? என்பது குறித்து கட்சியின் மத்திய செயற்குழுவே தீர்மானிக்கும் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஹக்மன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இரண்டு மூன்று கட்சிகள் இணைந்து அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

எனினும் கட்சி என்ற ரீதியில் மத்திய செயற்குழுவே இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும் எனவும் ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

Related posts

Australia calls on China to allow Uighur mother and son’s travel

රාජ්‍ය ආයතනවල දූෂණ සහ වංචා සෙවීමේ ජනාධිපති කොමීසමේ කාලය දීර්ඝ කෙරේ

புதிய அமைச்சுக்கள் சிலவற்றின் விடயதானங்கள் வர்த்தமானியில் வௌியீடு – [photos]