கிசு கிசுசூடான செய்திகள் 1

அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மஹிந்தவுக்கு வழங்கப்பட வேண்டும்

(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இடைக்கால அரசாங்கமொன்றை நிறுவும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், அவ்வாறு தீர்மானம் எடுத்தால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் போது எவ்வாறு செயற்படுவது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புகைத்தலினால் வாரமொன்றுக்கு 400 பேர் உயிரிழப்பு

ஒல்கொட் மாவத்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ

நாடாளுமன்ற பதவியை நழுவவிடுவாரா அலி சப்ரி ?