சூடான செய்திகள் 1

அரசப் பணியாளர்களது சம்பளம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-அரச பணியாளர்களது வேதனத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த மாதம் முதல் அவர்களுக்கான அடிப்படை வேதனத்தை 2500 முதல் 10000 ரூபாய் வரையில் அதிகரிக்கவிருப்பதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி அடிமட்ட அரச பணியாளர்களது அடிப்படை வேதனம் 2500 ரூபாவாலும், உயர்மட்ட அதிகாரிகளது அடிப்படை வேதனம் 10000 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர்  தெரிவித்தார்.

2015ம் ஆண்டு அரசாங்கம் அரச பணியாளர்களுக்கு 10000 ரூபாய் கொடுப்பனவை வழங்கியது.

இந்த தொகையை 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அடிப்படை வேதனத்துடன் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதேநேரம், 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் அரச பணியாளர்களது அடிப்படை வேதனம் 85 சதவீத்தினால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிவிப்பு !

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி