சூடான செய்திகள் 1

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பணிபுறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-திட்டமிட்டவாறு இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெறும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்தார்.

சிங்கப்பூர் – இலங்கை வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, இன்று காலை 8 மணி தொடக்கம் நாடளாவிய ரீதியாக இந்த அடையான பணிப்புறக்கணிப்பு இடம்பெறும்.

இந்த பணிப்புறக்கணிப்பின் போது சகல மருத்துவமனைகளிலும் அவரச சிகிச்சை பிரிவு செயற்படும், அத்துடன், சிறுவர், தாய்சேய் மருத்துவமனைகள் மற்றும் புற்றுநோய் மருந்துவமனைகள் என்பனவற்றின் செயற்பாடுகள் தடையின்றி இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சிங்கப்பூர் – இலங்கை வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக மக்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் கிஷாந்த தசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டது ருஹுணு பல்கலைக்கழகம்

அமித் ஜீவன் வீரசிங்க மற்றும் 9 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

களுத்துறை – தொட்டுபல சந்தியில் துப்பாக்கிச்சூடு