அரசியல்உள்நாடு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வௌியான தகவல் | வீடியோ

அடுத்த வருடம் நிச்சயமாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (24) கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

“இப்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து உள்ளது. இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று வேண்டுமானால் எமக்க கூற இருந்தது.

2026ல் செய்வோம் என்ற வாதத்தைக் கூட கொண்டு வரலாம். ஆனால் நாங்கள் செய்யவில்லை. மக்கள் படும் கஷ்டங்கள் எங்களுக்கு தெரியும்.

சம்பள உயர்வை நிச்சயம் எதிர்பார்க்கலாம். அந்த விவரங்களை பட்ஜெட்டில் தாக்கல் செய்வேன்” என்றார்.

Related posts

பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறையில்

மின் கட்டண திருத்தம் – பொதுமக்களின் கருத்து பெறும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

editor

நாளை 24 மணிநேர நீர்வெட்டு