உள்நாடு

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்கும் சுற்றுநிருபம் இன்று

(UTV | கொழும்பு) – அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் சுற்றுநிருபம் இன்று (06) வௌியிடப்படவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 வரவு செலவுத் திட்ட யோசனைக்கமைய இந்த சுற்றுநிரூபம் வௌியிடப்படவுள்ளது.

எவ்வாறாயினும், அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் திட்டத்திற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.

ஓய்வு பெறும் வயது 62 ஆக காணப்பட வேண்டும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தினூடாக குறித்த சங்கம் இதனை தெரிவித்திருந்தது.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10,039 பேர் கைது

கொரோனாவிலிருந்து 17 பேர் குணமடைந்தனர்

இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தவும் – சபாநாயகர்