உள்நாடு

அரச அனுமதிபெற்ற வாகனத்தில் கஞ்சா மற்றும் ஹெரோயின்

(UTVNEWS | BATTICALOA) – அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வந்த லொறியில் இருந்து இன்று (27) கஞ்சா மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பகுதியில் குறித்த போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து காத்தான்குடி பகுதிக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வந்த லொறியானது அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வருவதற்கு அனுமதி பெறப்பட்ட வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் பொலிஸ் சாஜன் எம்.வி.எம்.தாஹா தலைமையில் சென்ற குழுவினரால் நாவலடி இராணுவத்தினரின் உதவியுடன் கொழும்பில் இருந்து காத்தான்குடி பகுதிக்கு அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றி வந்த லொறியில் இருந்து குறித்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில்15 கிராம் ஐஸ் போதைப் பொருளும், 7 கிராம் கஞ்சா, 200 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஏற்றி வந்த வாகனம் மற்றும் 3 கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

Related posts

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 4 % ஆல் குறைப்பு

editor

இடியுடன் கூடிய மழை – பலத்த மின்னல் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

editor

பாடசாலைகள் விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

editor