உலகம்

அயர்லாந்து பிரதமராக மைக்கேல் மார்ட்டின் தேர்வு

(UTV|அயர்லாந்து )- அயர்லாந்து பாராளுமன்றத்தின் கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மைக்கேல் மார்டின் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டு பாராளுமன்றத்தின் கீழவையில் நடைபெற்றது. பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்டின் பிரதமர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

கீழ் அவையில் மொத்தமுள்ள 160 உறுப்பினர்களில் 93 பேர் மைக்கேல் மார்ட்டினுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 63 பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் மைக்கேல் மார்டின் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

மைக்கேல் மார்ட்டின் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வரை பிரதமர் பதவியில் இருப்பார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

ஏவுகணை தாக்குதல் – ஏடன்வளைகுடாவில் தீப்பிடித்து எரியும் கப்பல்

ஆடத் தெரிந்தவன் கையில் ஆட்சி : புதுவித பிரச்சாரத்தில் ட்ரம்ப்

“சீனா ஆபத்துடன் விளையாட முனைகிறது” – ஜோ பைடன்