உள்நாடு

அம்பாறையில் வாகனங்கள் விபத்து: சிலர் வைத்தியசாலையில்

பாறுக் ஷிஹான்
பிரதான வீதியில் பயணம் செய்த வாகனங்கள் சில நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சிலர் காயமடைந்த சம்பவம் அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை(12) மாலை கடும் மழை பெய்த சந்தர்ப்பத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பெரிய நீலாவணை போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த விபத்தில் மட்டக்களப்பில் இருந்து நிந்தவூர் பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கார் வாகனம்   மருதமுனை பிரதான வீதியில் திரும்ப எத்தனித்த போது குறித்து வீதியினால் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள்  முச்சக்கர வண்டி  பஸ் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டது என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டிகளில் வந்தவர்கள் விபத்தில் காயமடைந்து வைத்து சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது சீரற்ற காலநிலை நிலவுவதால் வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் அவதானத்துடன் செயல்படுமாறு  பெரியநீலாவனை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம் – சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

editor

இலங்கையில் கொரோனா பரவாத மாவட்டம்

மஸ்கெலியா எமலீனாவில் கடும் காற்று : 20 பேர் நிர்கதி