உள்நாடு

‘அம்பன்’ சூறாவளி வட கிழக்காக நகர்கிறது

(UTV – கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை வீழ்ச்சி இன்று (20) பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறித்த திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அம்பன் சூறாவளி வட கிழக்காக நாட்டைவிட்டு நகர்ந்து செல்வதுடன் பிற்பகலில் பங்களாதேஷின் மேற்கு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

உணவு பொருட்கள் 10 இற்கு நிர்ணய விலை

பசில் – கட்சியின் பின்வரிசை எம்.பிக்களுக்கு இடையே இன்று சந்திப்பு

ஜனாதிபதி தேர்ந்தெடுத்தலில் போராட்டக்காரர்களின் நிபந்தனை