அரசியல்உள்நாடு

அமைப்பாளர் பதவியில் இருந்து விலகிய ஹிருணிகா

ஐக்கிய மக்கள் சக்தியின் சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

பதவியில் இருந்து விலகிய போதிலும், கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராகத் தொடர்ந்தும் இருந்து வருவதாகவும், பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அமைப்பாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என கட்சியில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் ஏற்பட்ட மன விரக்தியே தனது இராஜினாமாவிற்கு காரணம் என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தனது அரசியல் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரேமச்சந்திர, எதிர்வரும் தேர்தலில் பொது மக்கள் தன்னை மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

SLMC எம்பி பதவியை இழக்கும் நஸீர் அஹமட்!

இன்றைய வானிலை

லொத்தர் சீட்டு விற்பனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்